பலாலி விமானநிலையத்தின் நிர்மாண பணிகளை பார்வையிட அமைச்சர் அர்ஜுனன் நேற்று அவசர விஜயம்
பலாலி விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று பலாலி விமான நிலையத்திற்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் நிர்மாண பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் பணிகளில் 70 வீதம் வரையில் பூர்த்தியாகியுள்ளதாவும் , விமாநிலையம் மற்றும் விமான சேவைகள் அமைக்கும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளில் 55 வீதமும் பூர்த்தியாகியுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி அளவில் பலாவி விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை செய்துவருகிறது . இதனால் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு முன்னரேயே நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு நடவக்கைகளை மேற்கொண்டுவருகிறது
இந்த பணிகள் அனைத்தும் சரியாக நடைபெறுகிறதா என்பதை பார்வையிடுவதற்காகவே அமைச்சர் இந்த அவசர விஜயத்தை மேற்கொண்டதாக அமைச்சின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டது . இந்த விஜயத்தின் பொழுது எந்த அரச அதிகாரிகளோ அல்லது அமைச்சின் அதிகாரிகளோ இன்றி அமைச்சர் தனிப்பட்ட முறையில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது