பலாலி இந்தியா விமான சேவை வருட கடைசியில்..தள்ளிபோகிறதா ?
பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூதூரில் நேற்றைய தினம் மட்டகளப்பு – மூதூர் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போதே இதனை பிரதமர் குறிப்பிட்டார். நாட்டுக்கு மேலும் உல்லாசப்பயணிகளை பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் மூலம் கொண்டுவரப்போவதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே பலாலி இந்தியா விமான சேவை செப்டம்பர் மாதம் என்று அறிவித்தல் வந்ததும் பின்னர் அது அக்டோபர் நடுப்பகுதி என்று பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது அறிவிக்கப்பட்டது. தற்போது வருட கடைசியில் என்று அறிவிக்கப்பட்டத்தன் மூலம் எதிர்பார்த்த மாதிரி அக்டோபறில் இந்த சேவை ஆரம்பிப்பது சந்தேகமாகவுள்ளது