Sat. Dec 7th, 2024

பலாலியில் இனந்தொியாதோா் துப்பாக்கி சூடு, இராணுவ சிப்பாய் படுகாயம்.

 

யாழ்.பலாலி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது முச்சக்சக்கர வண்டியில் வந்த இனந்தொியாத நபா்கள் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனா்.

இந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாய் படுகாயமடைந்துள்ளாா்.  இன்று காலை குறித்த இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை

செய்து கொண்டதாக செய்தி வெளியானது. ஆனாலும் அதனை மறுத்துள்ள சம்மந்தப்பட்ட தரப்புக்கள், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது

முச்சக்கர வண்டியில் வந்த சிலா் துப்பாக்கி சூடு நடாத்தியதாக கூறப்படுகின்றது.  எனினும் சுயாதீனமாக இந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சிப்பாயின் கால் ஒன்று சிதைவடைந்துள்ளதுடன்,

இடுப்புப் பகுதியிலும் காயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் சுயநினைவற்ற நிலையில் உள்ளதால் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை

என்று தெரிவிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்