பலரின் பங்கு பற்றுதலுடன் காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு
கரவெட்டி கமநல சேவை திணைக்களத்தினால் சுயதொழிலில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் முகமாக காளான் வளர்ப்பு தொடர்பான
செயன்முறையுடன் கூடிய பயிற்சி வகுப்பு நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கரவெட்டி கமநல சேவை திணைக்களத்தில் நடைபெற்றது.
கரவெட்டி விவசாய போதனாசிரியர் திருமதி.பிருந்தா பிரதீபன் அவர்களால் குறித்த பயிற்சி வழங்கப்பட்டதுடன் காளான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது.
குறித்த பயிற்சி வகுப்பில் விவசாயிகள் மற்றும் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.