Mon. Oct 7th, 2024

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு  தங்கம் மற்றும் இரு  வெள்ளிப் பதக்கங்கள்

கனிஸ்ட  பிரிவினருக்கான தேசிய மட்ட ஆண்களிற்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த  எஸ். மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தையும் ரி.சந்தோஸ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதோடு எஸ். மிதுன்ராஜ் குண்டு போடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.
கனிஸ்ட  பிரிவினருக்கான 57வது  தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான சம்மட்டி எறிதல் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த  எஸ். மிதுன்ராஜ் 32.85 மீற்ரர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த  ரி.சந்தோஸ் 31.07 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தை தமதாக்கிக் கொண்டதோடு 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான குண்டு போடுதல் போட்டியில் எஸ். மிதுன்ராஜ் 14.86 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்