பருத்தித்துறை வீட்டில் தீ, கலட்டி அதிபர் ஆசிரியர்களின் துரித செயற்பாட்டால் கட்டுப்பாட்டில் தீ.

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ பரவிய போதிலும் ஆசிரியர்களின் துரித நடவடிக்கையால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
வடமராட்சி பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலை குறித்த பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் விரைந்து செயற்பட்டு பொது மக்களின் துணையுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் பற்றி தெரியவருவதாவது, குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து புகை வருவதை கண்டு அங்கு உள்ள பெண் ஒருவரால் கூக்குரல் இடப்பட்டது. இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டின் சுவாமி படம் வைக்கும் அறையே தீ பிடித்துள்ளது. இதில் குறித்த அறையில் வைக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளது. இருப்பினும் அனைவரது ஒத்துழைப்பான செயற்பாட்டால் ஏனைய இடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.