Thu. May 21st, 2026

பருத்தித்துறை முனையில் குளிக்க சென்றவர் கடலில் மூழ்கி மரணம்

05.01.2020 இன்று கிளிநொச்சியிலிருந்து பருத்தித்துறை உள்ள உறவினர்களின் மரணச் சடங்கிற்கு வந்திருந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் முனைப்பகுதி கடலில் குளிக்க சென்று உள்ளார்கள். அவர்களில் ஒருவரான  ராமசாமி மாணிக்கதாஸ் வயது 38 கிளிநொச்சி என்பவர் கடலில் அடித்துச் சென்று சுழியில் சிக்கி கொண்டு இறந்துள்ளார்.மற்ற இருவரும் கரைசேர்ந்துள்ளார்கள். சுழியில் அகப்பட்டு இறந்தவரின் சடலம் கடற்படையினரும்  பொதுமக்கழும் இணைந்து  கரைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இடம்பெற்றது. சடலம் பிரதேச பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை போலீசார் விசாரணையை ஆரம்பித்து உள்ளார்கள் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடமராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு ஒருவர் இருவர் என பரிதாபமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். வடமராட்சி மக்கள் மிகவும் பயத்துடன் 2020 ஆம் ஆண்டை கழிக்க வேண்டியுள்ளது.  இந்த நிலையில் இன்று மேலும் ஒரு உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed