பருத்தித்துறை பெண்கள் உயர்தர கல்லூரியில் களேபரத்தில் முடிந்த பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

நேற்றைய தினம் யாழ் பருத்தித்துறை பெண்கள் உயர்தர கல்லூரியில் இடம்பெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் களேபரத்தில் முடிந்தது. கூட்டம் இடம்பெற்ற வேளை பெற்றார் ஆசிரியர் முன்னாள் சங்கத்தின் செயலாளர் திடீரென மேடையில் ஏறி ஒலிவாங்கியில் அதிபர் மீது சரமாரியான குற்றசாட்டுகளை முன்வைத்தார். இதில் பாடசாலையில் அதிபரினால் நிதி கையாடல் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தியதுடன் அதிபர் நிதி கணக்கு வழக்குகளை வெளிப்படுத்தாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மண்டபத்துக்கான மின்சாரத்தை துண்டித்து அவரை மேலும் பேசவிடாமல் செய்தவேளை அவர் ஒலிவாங்கி செயல்படாத நிலையிலும் தொடர்ந்து அதிபர் மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை தெரிவித்து வந்தார். அண்மையில் இடம்பெற்ற 200 ஆவது ஆண்டு நிகழ்வுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பெருமளவு நிதி தொடர்பாகவே இந்த குற்றம் சாட்டு இடம்பெற்றது. அத்துடன் புலமை பரிசில் பரீட்சையில் பெற்ற புள்ளி அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் நிலையில், அதில் குறைவாக புள்ளி பெற்ற மாணவர்களையும் நன்கொடை பெற்று அனுமதித்துள்ளதாகவும் இதன்பொழுது குற்றம் சுமத்தபட்டுள்ளது. இதன் முடிவில் புதிய நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
இந்த குற்ற சாட்டுகளை தனிப்பட்ட குரோதம் காரணமாக முன்வைத்தார்களா அல்லது இவை உணமையானவையா என்பதை எமது செய்தி குழுவால் உறுதி படுத்தமுடியவில்லை.
தற்பொழுது தமிழர் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து அன்பளிப்புகள் அதிகம் அனுப்பப்பட்டு வருகின்றமையும் இது தொடர்பான கணக்குவழக்குகள் எதுவும் பாடசாலை அதிபர்களால் பேணப்படுவதில்லை என்ற குற்றம் சாட்டு பரவலாக உள்ளது. ஒன்றுகூடலுக்கான சிறுண்டிகள் தொடக்கம், விளையாட்டு போட்டிகள் மற்றும் கட்டிட நிர்மாணிப்பு வரை வெளிநாடுகளில் உள்ள பழையமாணவர்களிடம் அதிபர்கள் பணம் பெற்று வருகின்றனன்ர். இதன்பொழுது ஒரே நிகழ்வுக்கு பல நபர்களிடம் இருந்தும் பணம் பெற்று வருவது தொடர்பான குற்றசாட்டுகள் அண்மைக்காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செலவுகளுக்கான பற்று சீட்டுகளின் பிரதிகள் பலருக்கும் அனுப்புவதன் மூலம் அவர்கள் இந்த செயலை இலகுவாக செய்து வருகிறார்கள். இதன் மூலம் சில பாடசாலை அதிபர்களின் பணப்பைகள் தான் நிறைந்து வருகின்றது.