பருத்தித்துறை பிரதேச வலைப்பந்தாட்டம் கலைமகள் சம்பியன்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில் நாவலடி கலைமகள் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் இன்று திங்கட்கிழமை அல்வாய் நக்கீரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் நாவலடி கலைமகள் அணியை எதிர்த்து திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக அணி மோதியது.
இதில் ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய கலைமகள் அணி ஆட்ட நேர முடிவில் 15:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.