பருத்தித்துறை பிரதேச செயலக 5000 மீற்றர் ஓட்டத்தில் சென் தோமஸ் விளையாட்டுக் கழக விகாஷன் தங்கம் வென்றார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான 5000 மீற்றர் ஓட்டத்தில் சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ். விகாஷன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ். விகாஷன் தங்கப் பதக்கத்தையும்,
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சஞ்சைய் வெள்ளிப் பதக்கத்தையும், சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த யோ.அமலரொக்சன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.