பருத்தித்துறை பிரதேச செயலக தடகள போட்டி பிரியதர்ஷினி தங்கம்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.பிரியதர்சினி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ். பிரியதர்ஷினி தங்கப் பதக்கத்தையும், பருத்தித்துறை சென் தோமஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜெ.ஜெயசாளினி வெள்ளிப் பதக்கத்தையும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த வி.வர்ஷிகா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.