பருத்தித்துறை பிரதேச சபை செயலரின் அடாவடி, உறவினருக்காக கொற்றாவத்தையில் அவதியுறும் 100 க்கு மேற்பட்ட குடும்பங்கள்
கரந்தாம்புல வீதி புனரமைப்பை தான்தோன்றி தனமாக தடைசெய்து 70 வருடங்களாக பாவித்து வந்த வீதியை திருத்த அனுமதி மறுத்ததன் மூலம் 100 க்கு மேற்பட்ட குடும்பங்களை இன்னலுக்கு உள்ளாக்கி உள்ளார் பருத்தித்துறை பிரதேச சபை செயலர் ஸ்ரீபாஸ்கரன். அவரது மிக நெருங்கிய உறவினரான சிவமைந்தன் என்பவர் இந்த வீதி புனரமைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்தமையினால அவருக்கு ஆதரவாக செயல்பட்ட பிரதேச சபை செயலாளர் இந்த புனரமைப்புக்கு அனுமதி மறுத்துள்ளார். இந்த வீதி புனரமைப்பினால் சிவமைந்தனின் காணியும் பாதிக்கப்படுவதால் அவர் இந்த வீதி புனரமைப்பை எதிர்த்து வருகிறார். இதன் மூலம் இவர்கள் ஒரு சமூகத்தை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த பாதை அமைப்புக்காக இப்பிரதேச மக்களின் சொந்த செலவில் 350,000 ரூபாவுக்கு காணி கொள்வனவு ( உறுதி இலக்கம் 14404/23.10.2017) செய்யப்பட்டு பிரதேச சபையின் பெயரில் எழுதப்படுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது உறவினரான சிவமைந்தன் என்பவற்றின் தனிப்பட்ட நலன் கருதி இந்த பாதையை புனரமைப்பதை நிறுத்தி வைத்துள்ளார். இதை பிரதேச சபை உறுப்பினர்களோ , பிரதேச சபை தலைவர்களோ கவனத்தில் கொள்ளாமையும் வருத்தம் அளிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்