Sat. Jun 14th, 2025

பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் மற்றும் உணவத்திற்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டம் வழங்கப்பட்டது

பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் ஒன்றிற்கு கடும் எச்சரிக்கையுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், உணவகம் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெதுப்பகச் சுற்றாடலில் இலையான்கள் பெருக இடமளித்தமை, அழுகலடைந்த உருளைக்கிழங்குகளை உணவுத்தயாரிப்பிற்கு களஞ்சியப்படுத்தியமை, வெதுப்பகப் பொருட்களுடன் தொற்று ஏற்படும் வண்ணம் இரசாயன பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, உட்பட சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றச்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால்  கடும் எச்சரிக்கையுடன் 50000 தண்டப்பணம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்  மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருட்களை தொற்று ஏற்படும் வண்ணம் களஞ்சியப்படுத்தியமை தொடர்பாக பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள  உணவகம் ஒன்றிற்கு 20000 தண்டப்பணமும் விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்