Tue. Apr 23rd, 2024

பருத்தித்துறை நகர் பகுதியை முடக்க நடவடிக்கை

நாளை வெள்ளிக்கிழமை முதல் பருத்தித்துறை நகரப் பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று  206 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 40 தொற்றாளர்களும், இன்று அன்ரிஜன் பரிசோதனையில் 5 பேருக்கும் என 45 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்தே பருத்தித்துறை நகரப் பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரை அண்டிய பகுதியில் பலர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் சிவன் கோயில் தேர் திருவிழாவை நிறுத்துமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்ட போதிலும்,  அரசாங்கம் திருவிழாவை நடாத்துவதற்கு அனுமதி தந்து விட்டது. ஆகையால் தாம் நடாத்தப் போவதாக கூறி திருவிழா நிகழ்வை நடாத்தியுள்ளனர். இந்நிகழ்வில்
நேற்று  பிசிஆர் எடுக்கப்பட்டவர்களில் சிலர்
பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு அக்காட்சியை தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து முகநூலிலும் பிரசுரித்துள்ளார். தற்போது முகநூலில் பதிவு செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரிடமிருந்து பலருக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.  அத்துடன் பருத்தித்துறை பகுதியில் மாம்பழம் வியாபாரத்தில் ஈடுபட்ட ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்