பருத்தித்துறை நகரசபை தவிசாளர் பதவி விலகினார்
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ.இருதயராசா தனது பதவியை சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை இராஜினாமா கடிதத்தை செயலாளரிடம் கையளித்தார்.
கடந்த 5ம்திகதி கொண்டுவரப்பட்ட 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுச் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருத்திய வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்காக இன்றைய தினம் 9:30மணிக்கு இடம் பெறவிருந்தது
இந்நிலையில் 9:20 மணிக்கு வருகைதந்திருந்த தவிசாளர் சபை செயலாளரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்து நகரசபை வாகனத்தில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து 9:35 மணியளவில் சபையை கூட்டிய பருத்தித்துறை நகரசபை செயலாளர் தவிசாளர் பதவி விலகியதை உத்தியோகபூர்வமாக சபைக்கு அறிவிக்கப்பட்டது. அவர் பதவி விலகியது தொடர்பாக வர்த்தமானியில் பிரசுரித்து புதிய தவிசாளர் தெரிவாகும் வரை சபை நடவடிக்கைகள் இடம் பெறாது எனவும் செயலாளர் அறிவித்தார்.
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் பதவி விலகியதைத் தொடர்ந்து பருத்தித்துறை நகர வர்த்தகர்கள் சிலர் வெடி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பதவி விலகல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 5ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாவது வரவு செலவு திட்டம் வாசிக்கப்படவுள்ள நிலையில், திடீரென பதவி விலகியமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வருட இறுதியில் ஜோ.இருதயராசா பதவி விலகியதால் சபை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.