பருத்தித்துறை துறைமுகத்தில் றோலர் படகு கவிழ்ந்து விபத்து
வடமராட்சி பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் றோலர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கடல் பயணத்தை மேற்கொண்ட றோலர் மீன்பிடி படகு இயந்திரக் கோளாறு காரணமாக காற்றின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை நோக்கி வருகை தந்து கொண்டிருந்த போது, கடலில் உள்ள பாறை கல்லில் மோதுண்டு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
அதன் பின்னர் இராணுவப் புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் இணைந்து படகை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.