Sat. Apr 11th, 2026

பருத்தித்துறை சுகாதார பிரிவினர் திடீர் சோதனை

பருத்தித்துறை சுகாதார பிரிவினரால் பருத்தித்துறை நகர்பகுதில் மேற்கொள்ளப்பட்ட திடீர்  பரிசோதனையில் பழுதடைந்த சில பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் வர்த்தக உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்கள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து காலாவதியான பொருட்கள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் போன்றவற்றை  அவதானிக்க பருத்தித்துறை சுகாதார குழு நேற்று  சனிக்கிழமை பருத்தித்துறை நகர்பகுதில் இயங்கும் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சோதனையிட்டனர்.
இதில் சில வர்த்தக நிலையங்களில் பழுதடைந்த உழுந்து போன்ற உலர் உணவுகள் மற்றும் அறிவுறுத்தல் வழங்கிய பின்னரும்  குளிரூட்டிகளில் சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை ஒன்றாக சேர்த்து வைக்கப்பட்டமையும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு உரிமையாளர்களும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed