Fri. Mar 29th, 2024

பருத்தித்துறை சுகாதார பிரிவின் தொடர் நடவடிக்கை

கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டு வருகிறதா என பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை பொது சுாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யபட்டு வருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலுடனான நாளாந்த இயக்கத்தின்போது அரச, அரசசார்பற்ற நிறுவங்கள் கொரோனா கட்டுப்பாட்டு முற்பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்து நோய்தொற்று ,பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை இடையறாது மேற்கொள்வதை ஊக்கப்படுத்தும் முகமாகவே இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சவர்க்காரமிட்டுக் கைகழுவுதல், சரியான விதத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், வருகையாளர்களது விபரங்களைப் பதிதல், உடல்வெப்பத்தை அளவிடல், விழிப்புணர்வு பதாதைகளைக் காட்சிப்டுத்துதல் ,கிருமி நீக்கம் செய்தல் உட்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் இப்பரிசோதனைகளின்போது கவனஞ்செலுத்தப்பட்டு மீள்வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ளதால் இவை பாடசாலை மாணவர் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கருதி கிரமமாக பேணப்படவேண்டியது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்