பருத்தித்துறை குடத்தனைபகுதியில் ஒரு தொகுதி பழைய ஆயுதங்கள் மீட்பு
பருத்தித்துறை குடத்தனை கிழக்கு பகுதியில் அரசாங்க காணியொன்றலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில், ஒருதொகை ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்படுள்ளது என்று போரிலே ஊடகப்பிரிவு அறிவித்துள்ளத. இதன் குண்டுகள் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவற்றில் 2005 என்று நம்பப்படும் காலப்பகுதியில் உற்பத்திசெய்யப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்று, 60 மில்லி மீற்றர் ரக 4 மோட்டார் குண்டுகள் , 40 மில்லி மீற்றர் ரக கைக்குண்டு துப்பாக்கி இரவைகள் 12 மற்றும் பராலைட் மூன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிரடிப்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.