பருத்தித்துறை கலட்டி றோ.க.த.பாடசாலை மாணவன் மாணவன் கபிஷனின் நெகிழ்ச்சியான செயல்

பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவனின் நெகிழ்ச்சியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் கடந்த புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் சாரணர் கடமைகளில் ஈடுபட்டனர். அப்போது உடல் சுகயீனமுற்ற வயேதிப பெண் ஒருவர் மதிய உணவு கிடைக்குமா என சாரணர்களிடம் கேட்டுள்ளார். அன்றைய தினம் சாரணர்களுக்கு கோழி இறைச்சியுடன் சோற்றுப் பொதி வழங்கப்பட்டது. தனக்கு என வழங்கப்பட்ட சாப்பாட்டு பொதியை வீட்டில் கொண்டு சென்று சாப்பிடப் போவதாக கூறி அந்த வயோதிப பெண்ணிற்கு பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை சாரணரை சேர்ந்த தரம் 7 மாணவன் கபிஷன் வழங்கியுள்ளார். இவரின் செயற்பாடு அனைவரையும் மனம்நெகிழ வைத்தது. இவரை நல்வழிப்படுத்தும் அதிபர், ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.