Thu. May 21st, 2026

பருத்தித்துறை கடலில் நீராடியவர் சுழியில் சிக்கி சாவு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடலில் நீராடிக் கொண்டிருந்தவர் சுழியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த இராமசாமி மாணிக்கராசா (வயது-36) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

இறுதிச் சடங்கு ஒன்றுக்கு சென்ற அவர் பருத்தித்துறை முனைக் கடலில் நீராடிய வேளை கடல் சுழியால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed