பருத்தித்துறை கடலில் ஆணின் சடலம்
பருத்தித்துறை இறங்கு துறைமுக பகுதி கடலினுள் ஆண் ஒருவரின் சடலம் சற்று முன்னர் மிதந்து கரையொதுங்கியுள்ளது. காற்சட்டையுடன் மேலாடையின்றி மிதந்துள்ளது. இறங்குதுறைப் பகுதியில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும்,
அதில் குறித்த நபர் அதிகாலை 4.30 மணியளவில் குதிக்கும் காட்சி பதிவாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதேசமயம் வரணி பகுதியில் ஒருவரை கடந்த இரண்டு கிழமையாக காணவில்லை எனவும் தகவல் உள்ளது. இந்நிலையில் பருதித்துத்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.