பருத்தித்துறை ஐக்கியத்தின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை
வடமராட்சி சிரேஷ்ட சங்கத்தின் அனுமதியுடன் அபிராமி இரும்பக அனுசரணையுடன் அமரர் க.சொக்கன் ( சசிகுமார் ) அவர்களின் ஞாபகார்த்தமாக பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்தும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை புதன்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இதில் பிற்பகல் 4 மணிக்கு முதலாவது அரையிறுதி போட்டியில் வல்வை அணியை எதிர்த்து கொலின்ஸ் அணியும் பிற்பகல் 5 மணிக்கு இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில்


பருத்தித்துறை ஐக்கிய அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியும் மோதவுள்ளன.