Sun. Apr 12th, 2026

பருத்தித்துறை இ.போ.ச.சேவை சில மணித்தியாலங்களில் இடம்பெறும்- வடபிராந்திய முகாமையாளர்

முறையான தகவல் கிடைக்கப் பெறாமையால் இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.  இருப்பினும் சிறிது நேரத்தில் வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் நேரில் சென்று கலந்துரையாடியுள்ளார். இதனால் சில மணித்தியாலங்களில் பருத்தித்துறை சாலை பேருந்து சேவைகள் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலாளர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினர் மற்றும் காரைநகர் , பருத்தித்துறை சாலை முகாமையாளர்,  ஊழியர்களுக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் முறையான நேரத்தில் தகவல் கிடைக்கப் பெறாமையால் பருத்தித்துறை சாலை முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை.  நேற்று அவர்களுக்கான எரிபொருள் இன்று வழங்கப்படவுள்ளது. இதனால் அவர்கள் சேவையில் ஈடுபடுவார்கள். இதுதொடர்பாக நேரில் சென்று கலந்துரையாட பருத்தித்துறை சாலைக்கு சென்று கலந்துரையாடவுள்ளதாகவும், சில மணி நேரத்தில் போக்குவரத்து இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed