பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் கையளிப்பு

Srilanka College of Internal Medicine அமைப்பினரால் அத்தியாவசியமான மருந்து பொருட்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
பருத்தித்துறை வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr.(Mrs).S.Ravichandran அவர்களின் ஏற்பாட்டில் அவசர சிகிச்சை பிரிவு நோயாளர்களுக்கு தேவையான மிகவும் அத்தியாவசியமான ஒரு தொகுதி அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்து பொருட்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய அத்தியட்சகர் Dr.V.கமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.