Thu. May 21st, 2026

பருத்தித்துறையில் விபத்து

பருத்தித்துறை 1ம் கட்டைச் சந்தியில் இரு மோட்டார் சையிக்கிள்கள் மோதியதில் ஒருவர் விபத்திற்குள்ளாகியுள்ளார். இவ்விபத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது. சம்பவத்தில் குடத்தனையைச் சேர்ந்த பி.யதுசன் என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது நெல்லியடியிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தவர் 1ம் கட்டைச் சந்திக்கு அருகே வடமராட்சி கல்வி வலயத்திற்கு திரும்பிய வேளையில் பின் பக்கமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் இடித்ததில் விபத்திற்குள்ளானது. இதில் பின்பக்கமாக வந்தவர் தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed