Fri. Mar 21st, 2025

பருத்தித்துறையில் பொலீஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் ஒருவர் காயம்

பருத்தித்துறையில் பொலீஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் இன்று காலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை பொலிஸார் வழிமறித்தனர். பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர் பயணித்த நிலையில் டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்னொருவர் காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்