Sun. Apr 12th, 2026

பருத்தித்துறையில் தொடர் களவு பாடசாலை மாணவன் உட்பட மூவர் கைது

தொடர் களவில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட  மூன்று இளைஞர்களைப் பருத்தித்துறை பொலீஸார் நேற்று (3) கைது செய்துள்ளனர். கடந்த 31ம் திகதி பருத்தித்துறை நகரில் உள்ள நாதன் ஸ்ரோர் கடையில் பின் கதவு உடைக்கப்பட்டு பல பொருட்கள் களவாடப்பட்டது தொடர்பாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து CCTV கமரா மூலம் தமது விசாரணையை முடுக்கி விட்ட பொலீஸாருக்கு மூன்று இளைஞர்கள் தடயங்கள் கிடைக்கப் பெற்று நேற்று சந்தேகத்தின் பேரில் அந்த மூவரையும் பருத்தித்துறை  பொலீஸார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பருத்தித்துறை நகரை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர் களவில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed