Thu. Jan 23rd, 2025

பருத்தித்துறையில் திடீர் தீ விபத்து!! -பஸ், வான் முற்றாக எரிந்து நாசம்-

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்த்துடன் அருகில் நன்ற கயஸ்,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

இந்த அனர்த்தம் இன்று புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றிர் பேருந்து, கயஸ், முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்து. இந்நிலையில் வாகணங்கள் தீபிடித்து எரிந்துள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்