பருத்தித்துறையில் தயிர் அழிக்கப்பட்டது
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது விற்பனை செய்யப்பட்ட தயிரினை அவர்கள் முன்னிலையிலேயே சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.

பருத்தித்துறை நகர்ப்புறத்தில் பொதுமக்களினை ஏமாற்றி தவறான வகையில் பொதி செய்யப்பட்டதும் உரிய நியமங்களிற்கு அமைவாக களஞ்சியப்படுத்தாமலும் தயிரினை விற்பனை செய்யும் நோக்குடன் வாகனத்தில் கொண்டு சென்ற வெளிமாவட்டத்தினை சேர்ந்த இருவரினது தயிர்ப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் முன்னிலையில் குறித்த தயிர்ப்பொருட்கள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொது முறைப்பாடு பொதுமகனினால் பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட குழுவினர் குறித்த தயிர்ப்பொருட்களை பறிமுதல் செய்ததுடன் உணவுச்சட்ட ஏற்பாடுகளை மீறிய நிலையில் நுகர்வோரிற்கு விற்பனை செய்யும் பொருட்டு தம்வசம் வைத்திருந்த அனைத்து தயிர்ப் பொருட்களையும் அழித்தமை குறிப்பிடத்தக்கது.