பருத்தித்துறையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு 1,27,000 ரூபா அபராதம்
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகம், வெதுப்பகம் மற்றும் பல்பொருள் அங்காடி போன்றவற்றிற்கு 127000 தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை ஆளுகைக்கு உட்பட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகம் ஒன்றினது கழிவுநீரினை வெளிச்சுற்றாடலில் வெளியேற்றியதன் மூலம் காவிகளின் பெருக்கத்திற்கு ஏதுவாக சூழலினை உண்டு பண்ணியமை, திறந்த வெளியில் திண்மக்கழிவுகள் திரள அனுமதித்ததுடன் துர்நாற்றம் வீசக்கூடியவாறான சூழலில் உணவினை உற்பத்தி செய்தமை தொடர்பாக உணவக உரிமையாளரிற்கு எதிராகவும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வெதுப்பகம் மற்றும் பல்பொருள் அங்காடிக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு இணங்க உணவகத்திற்கு 60,000 தண்டப்பணமும், வெதுப்பகத்திற்கு 47000 தண்டப்பணமும் பல்பொருள் அங்காடிக்கு 20000 தண்டப்பணமும் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.