பரபரப்பான வலைப்பந்தாட்டத்தில் மக்கள் வங்கி அணி சம்பியன்
யாழ் மாவட்ட இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் வடமாகாணத்திற்கு உட்பட்ட வங்கிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் மக்கள் வங்கி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண வங்கிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் மக்கள் வங்கி அணியை எதிர்த்து இலங்கை வங்கி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் மக்கள் வங்கி அணி 4:2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.