பரபரப்பான ஆட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணி சம்பியன்
அகில இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அகில இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டி யாழ் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக் கழக அணியை எதிர்த்து சப்பிரகமுவ பல்கலைக்கழக அணி மோதியது.
இரு அணிகளும் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் யாழ் பல்கலைக்கழக அணி ஆட்ட நேர முடிவில் 60:55 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.