பரபரப்பான ஆட்டத்தில் அரியாலை சரஸ்வதி சம்பியன்
அமரர் திருமதி. லலிதா சண்முகலிங்கம் ஞாபகார்தமாக நடைபெற்ற உள்ளூர் சனசமூக நிலையங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் அரியாலை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய அணியை எதிர்த்து அரியாலை ஐக்கிய சன சமூக நிலைய அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய அணி 12:9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்