பரசூட் பயிற்சியின் பொழுது பரிதாபமாக கடலினுள் விழுந்து இராணுவ வீரர் பலி
பாரசூட் பயிற்சி நடவடிக்கையின் போது இராணுவத்தின் கோப்ரல் தர அதிகாரி ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் திருகோணமலை குச்சவெளி கும்புறுபிட்டி பகுதியில் இடம்பெற்றது. பயிற்சியின் பொழுது ராணுவர் வீரர் கடலினுள் விழுந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள் தெரியவராத பொழுதும், பரசூட் விரிவதில் உள்ள கோளாறால் இது இடம்பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது