பன்னல பகுதியில் வெடிகுண்டுகள் மீட்பு
மூன்று கிளைமோர் குண்டுகளும் ஒரு அழுத்த வெடிகுண்டும் பன்னல என்ற இடத்தில் உள்ள பரகமான காட்டுப்பகுதியில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றுக்கொள்ளப்பட இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் காட்டு பகுதியில் உள்ள மரம் ஒன்றின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரும் கைது செய்யப்படவில்லை. பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தேர்தல்கள் நெருங்கும் சமயங்களில் பல இடங்களில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதானது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது. இதன்மூலம் தேர்தலில் ஏதேனும் குழு ஆதாயம் தேட முயற்சிக்கிறதா என்று சந்தேகம் எழுகின்றது