பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களதில் தொழில்சங்க நடவடிக்கை, பொதுமக்கள் அவதி, ஊழியர்களுடன் முறுகல் நிலை
பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்திலும் அதற்கு முன்னாள் உள்ள பகுதிகளிலும் தற்போது பதற்றமான நிலை நிலவுவதாக தெரியவருகின்றது .இதன் காரணமாக பத்தரமுல்ல பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக திணைக்களத்தின் மட்டுபடுத்தப்பட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதனால் அவ்விடத்திற்கு வந்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது