பதுளை மலைச்சரிவில் செங்குத்து பள்ளத்தில் விழுந்த பஸ் , 8 பேர் பலி
பதுளையில் உள்ள பசறை -மதுல்சிமா வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (06) மாலை 5.20 மணியளவில் பசறைவிலிருந்து மதுல்சிமா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், 6-வது மைல் அருகே மலைச்சரிவில் செங்குத்துப்பாதையில் கீழே விழுந்துள்ளது .
இந்த விபத்தில் 8 பேர் இறந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளார்கள், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து பசறை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
