பதில் பாடசாலை தொடர்பான அறிவித்தல்
எதிர்வரும் சனிக்கிழமை யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு பதில் பாடசாலை நாள் நடைபெறும் என வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.
அவர் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 21.08.2025 அன்று யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறைக்கு அமைவான பதில் பாடசாலை நாள் எதிர்வரும் சனிக்கிழமை 30.08.2025 அன்று நடைபெறும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.