Thu. May 21st, 2026

பட்மின்ரன் தொடரில் நல்லூர் பிரதேச அணி இரு பிரிவுகளிலும் சம்பியன்

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்டச் செயலகத்தின் விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான பட்மின்ரன் போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணி இரு பிரிவுகளிலும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்டச் செயலகத்தின் விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான பட்மின்ரன் போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
ஆண்களுக்கான போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தையும் கரவெட்டி பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பெண்களுக்கான போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தையும் பருத்தித்துறை பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed