பட்டதாாிகளுக்கு தபால் மூலம் நியமன கடிதங்கள்! இன்று அனுப்பபட்டது.
பட்டதாாிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கான நியமன கடிதங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப் படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது.
குறித்த நியமனக் கடிதங்கள் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும்
தேசிய வேலைத் திட்டத்தின் மூலம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்கமைய இதுவரை 40 ஆயிரம் விண்ணப்பதாரிகள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்திருப்பதாக பொது நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், குறித்த விண்ணப்பதாரிகளுக்கான தொழிற் பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.