படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள 4000 ஏக்கரும் விடுவிக்க வேண்டும்!! -சிறிதரன் எம்.பி அவசர கடிதம்-
கிளிநொச்சியில் படைத்தரப்பின் ஆக்கிரமிப்பில் உள்ள நான்காயிரத்து 207.2 ஏக்கர் காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய 4 பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள இரண்டாயிரத்து 119.7 ஏக்கர் வரையான அரச காணிகளும் இரண்டாயிரத்து 88.13 ஏக்கர்; தனியார் காணிகளும் உள்ளடங்கலாக சுமார் நான்காயிரத்து 207.2 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர், பொலிஸ் சிவில் பாதுகாப்புத்திணைக்களம், கடற்படையினர் வசமுள்ள்தகாவும் மேற்படி காணிகள் யாவும் அரச திணைக்களங்களாலும் பொதுமக்களாலும் விடுதலைப்புலிகளாலும் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளாகும்.
என்று மாவட்டத்தில் நகர வடிவமைப்பை கட்டமைப்பதற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவையை மக்கள் மயப்படுத்துவதற்கும் இடையூறாக உள்ளதுடன், மாவட்டத்தை சேர்ந்த பல நூற்றுக்கும் மேற்படி குடும்பங்கள் குடியிருப்பதற்கான காணிகள் இன்றியுள்ளன.
இந்த நிலையில் மேற்படி காணிகளை படையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இவ்வாறு ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமறு வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.