Fri. Jan 17th, 2025

பகிடிவதைக்கு தடை. மீறினால் 10 ஆண்டுகள் சிறை, கல்வியமைச்சு தீா்மானம்.

இலங்கை பல்கலைகழகங்களில் பகிடிவதை அதிகாித்துள்ளதுடன், தற்கொலைகள் மற்றும் கல்வியை கைவிடும் சம்பவங்கள் அதிகாித்துள்ளது.

இந்நிலையில் மோசமான பகிடிவதையில் ஈடுபட்டால் அவா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உயா்கல்வி அமைச்சு தீா்மானித்துள்ளது.

இதன்படி 2018 – 2019 கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல், உள ரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் தொடர்புபடும் மாணவர்களையும் இந்த செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக இருப்பினும் அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்தார். அத்துடன் கொடூரமான பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருடச் சிறைத்த் தண்டனை வழங்கப்படும் என்றும் இதற்குரிய ஒத்துழைப்புகளை பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ்மா அதிபர் வழங்குவதாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்