Thu. Jan 23rd, 2025

நோயாளியை பார்வையிடாமல் திருப்பி அனுப்பிய கரவெட்டி பிரதேச வைத்தியசாலை வைத்தியர்

வடமராட்சி பிரதேசத்தில் உள்ள கரவெட்டி அம்பம் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி நோயாளியை பார்வையிடாது திருப்பி அனுப்பியதாக பிராந்திய வைத்திய அதிகாரியிடம் முறையிடப்படுள்ளது .குறித்த வைத்தியசாலைக்கு கடந்த வியாழக்கிழமை சென்ற 87 வயதுடைய நோயாளி ஒருவர் , தனது முதியோர் அடையாள அட்டையை காண்பித்து தனது முதுமை காரணமாக தனக்கு முன்னுரிமை தருமாறு கேட்டபோது அங்கு கடமையில் இருந்த சிற்றுளியர் உம்மத் அடையாள அட்டையை கொண்டு குப்பையில் போடு என்று கூறி வரிசையில் நின்று காட்டுமாறு ஏசியுள்ளார்
பின்னர் அந்த நோயாளி கால்கடுக்க நின்று வைத்தியரை அணுகியபோது அங்கு கடமையில் இருந்த பெண்வைத்தியர் உம்மை பார்வையிட முடியாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் சுகாதார அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அன்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சம்பவம் தொடர்பாக பிராந்திய வைத்திய அதிகாரியிடம் அந்த நோயாளி முறையிட்டுள்ளார்..

 

இந்த செய்தி வாசகர் ஒருவரால் நியூஸ் தமிழுக்கு அனுப்பபட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்