நேற்று மீண்டும் ரயில்வே சேவையை பொது அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு
ரயில்வே சேவையை பொது அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 1979 இன் 61. பிரிவு 2 ன் படி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, ரயில் மற்றும் ரயில் பாதைகள் மூலம் பயணிகள் மற்றும் பொருட்களுக்கான போக்குவரத்து சேவைகளின் திறமையான மற்றும் தடையற்ற செயல்பாட்டை, அவற்றின் பராமரிப்பு மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள், சமிக்ஞை அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடு, டிக்கெட் வழங்கல் ஆகியவற்றை ரயில்வே திணைக்களம் தடையின்றி வழங்க வேண்டும், .
ஏற்கனவே ஜூன் 27 ஆம் தேதி, இலங்கை புகையிரதசேவையை அத்தியாவசிய பொது சேவையாக அறிவித்து ஜனாதிபதி அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.