நேருக்கே நேர் இரு பஸ்கள் மோதியதில் சாரதி உட்பட இருவர் காயம்
ஹொறணை – கொழும்பு பிரதான வீதியின் கெஸ்பேவ என்ற இடத்தில இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து கெஸ்பேவவிற்கு சென்ற தனியார் பஸ் ஒன்றும் பண்டாரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது . இந்த சம்பவத்தில் சொகுசு பேருந்தின் சாரதியும் பயணி ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்