Sat. Dec 7th, 2024

நேருக்கு நோ் மோதிய மோட்டாா் சைக்கிள்கள், ஒருவா் உயிாிழப்பு.

பொத்துவில் ஊரணி பகுதியில் நேற்று இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிாிழந்திருக்கின்றாா்.

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கோமாரியில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது. விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் முன் பகுதி

வேறாகவும் பின் பகுதி வேறாகவும் இரண்டாக உடைந்துள்ளது. பொத்துவில் கோமாரியை சோர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான

ஞானசூரியம் ரதீஸ்வரன் (38) என்பவரே பலியாகியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்