Thu. Apr 24th, 2025

நெல்லியடி முச்சக்கர வண்டி கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

நெல்லியடி முச்சக்கர வண்டி கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

2025ம் ஆண்டிற்கான நெல்லியடி முச்சக்கர வண்டி கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் மற்றும் கூட்டுறவு சங்க உத்தியோகத்தர்களான அ.தயாளன், சி.சிறிதரன் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தலைவராக இராசன் விஜிதரன், செயலாளராக சிவலிங்கம் ஆர்த்திகன், பொருளாளராக சிவராசா புஸ்பராசா, உப தலைவராக மாயவன் மகேஸ்வரன், உப செயலாளராக இந்திரன் நிரோஜன் மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக ஆனந்தராசா அருண்ராஜ், பிரேமதாஸ் பிறேம்நாத், சந்திரராசா சந்திரலிங்கம், சிவக்கொழுந்து சிவகுமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்