நெல்லியடி மத்திய கல்லூரியின் ஒளிவிழா
நெல்லியடி மத்திய கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வு எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் க.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கரவெட்டி பங்குத் தந்தை வண.பிதா அருட்தந்தை ஜஸ்ரின் அடிகளார் அவர்களும், சிறப்பு விருந்தினராக கட்டைவேலி தூய திரித்துவ மெதடிஸ்த ஆலய வண.பிதா குணம் சுரேந்தர் அவர்களும் கெளரவ விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ஓய்வுபெற்ற ஆசிரியர் வே.நாகராஜா அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.