நெல்லியடி பொலிஸ் விசேட காரியாலயத்தின் புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு கோடியே ஆறுபது இலட்சம் பெறுமதியான பணத்தை களவாடிய நபர் கைது
நெல்லியடி பொலிஸ் விசேட காரியாலயத்தின் புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு கோடியே ஆறுபது இலட்சம் பெறுமதியான சுவீஸ் பிராங்கை களவாடியவரையும், அவரோடு குறித்த பணத்தில் மகிழ்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களையும் நெல்லியடி பொலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லியடி பகுதியில் களவு, போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரினால் நெல்லியடி பொலீஸ் பிரிவிற்கு பொலீஸ் பரிசோதகர் கஜான் புத்திக நியமிக்கப்பட்டார். அவரின் துரித நடவடிக்கையால் திருடன் ஒருவரையும் அவருடன் மகிழ்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாய் பகுதியில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் 41 சுவிஸ் பிராங் களவாடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை பெறுமதியில் சுமார் ஒரு கோடியே ஆறுபது இலட்சம் பெறுமதி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் கூலி வேலை செய்பவர். அவரும், அவருடன் சேர்ந்த நண்பர்களும் சிறிது நாட்களாக மோட்டார் சைக்கிள், புதிய தொலைபேசி வாங்குவது, மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்களால் பொலீஸ் விசேட காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த பணம் கீழே கிடந்து எடுத்ததாக கூறியுள்ளார். அதன் பின்னரான தொடர் விசாரணையில் குறித்த நபர் அத்தாய் பகுதியில் உள்ள வீட்டிற்கு கூலி வேலை செய்வதற்காக சென்ற போதே களவாடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் விக்னேஸ்வரா கல்லூரி பின் வீதியில் உள்ள கரவெட்டி சண்டில்குளம் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் கரவெட்டி மேற்கு இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த 5 பேரும், கரவெட்டி மத்தொணி பகுதியைச் சேர்ந்த 3 பேரும் கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.